Friday, 6 April 2018

ஆயிரத்தில் ஒருவன் படத்தில் நடிக்க இருந்த சிவகார்த்திகேயன் - பாதியிலேயே ஓட வைத்த இயக்குனர்



நடிகர் சிவகார்த்திகேயன் பல கட்ட போராட்டங்களுக்கு பிறகு இன்று முன்னணி நடிகர் என்ற இடத்தை அடைந்திருக்கிறார். அவரின் ரசிகர் பட்டாளமும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

பல முன்னணி இயக்குனர்களும் இப்போது, இவரை தன் படங்களில் நடிக்க வைக்க வரிசையில் நிற்கும் இந்த வேளையில், இயக்குனரின் தொல்லை தாங்க முடியாமல் சிவ கார்த்திகேயன், ஆயிரத்தில் ஒருவன் படத்திலிருந்து பாதியிலேயே நழுவிக் கொண்ட தகவல் சமீபத்தில் வெளியாகி இருக்கிறது.



அதன் படி நடிகர் சிவ கார்த்திகேயன், 2010ம் ஆண்டு வெளிவந்து கலவையான விமர்சனங்களைப் பெற்ற "ஆயிரத்தில் ஒருவன்" திரைப்படத்தில் கார்த்தியின் நண்பராக நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.

ஓரிரு நாட்கள் நடித்த சிவ கார்த்திகேயன், கதையை முழுவதும் சொல்லாமல் காட்டுப் பகுதிகளுக்குள் அழைத்து சென்று கொசு கடிகளை வாங்க விட்டதினாலும், இயக்குனரின் ஒரு சில கடுமையான நடவடிக்கைகளினாலும் சொல்லாமல் கொள்ளாமல் நழுவிக் கொண்டதாக கிசு கிசுகிறது கோலிவுட் வட்டாரம்.



கடினமாக உழைக்கும் இயல்புடைய, தன் தொழிலையே கடவுளாக மதிக்கும் சிவகார்த்திகேயன், அதுவும் வாய்ப்பு தேடும் இளம் நடிகராக இருந்த போதே பாதியிலேயே நழுவி இருக்கிறார் என்றால், இயக்குனர் எப்படி டார்ச்சர் செய்திருப்பார் என்று கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்.     

Disqus Comments
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();