Saturday, 7 April 2018

இதுதான் அவர் வெற்றிக்கு காரணம் - சிவகார்த்திகேயனின் ரகசியம் சொல்லும் நாயகி



சிவ கார்த்திகேயன் முதன் முதலாக, முதன்மை கதாபாத்திரத்தில் நடித்த  திரைப்படம் 'மனம் கொத்திப் பறவை'. அந்த திரைப்படத்தின் போதும், இப்பொழுது இருக்கும் சிவ கார்த்திகேயனுக்கும் உள்ள இடைவெளியை பாருங்கள்.

அந்த அளவிற்கு குறுகிய நேரத்தில் முன்னணி நடிகர் என்ற இடத்தை, எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல் ஒற்றை ஆளாக அடைந்திருக்கிறார்.



என்றாலும் அவரோடு நாயகியாக நடித்திருந்த ஆத்மியா,  இருந்த இடம் தெரியாமல் சினிமா உலகை விட்டே காணாமல் போனார். ஆறு ஆண்டுகளுக்கு பின் 'காவியன்'எனும் படத்தின் மூலம் மீண்டும் ரீ என்ட்ரி கொடுக்க இருக்கும் ஆத்மியா,நடிகர் சிவ கார்த்திகேயனுடன் நடித்த அனுபவம் பற்றி பகிர்ந்திருக்கிறார்.


'மனம் கொத்திப் பறவை' படப்பிடிப்பின் போது ஒருமுறை 'உங்களுக்கு விருப்பமான கடவுள் யார்?' என்று ஆத்மிகா சிவகார்த்திகேயனிடம் கேட்டிருக்கிறார். அதற்கு அவர் 'எனக்கு எப்பொழுதும் என் வேலைதான் கடவுள்' எனக் கூறி, வேலையின் மேல் அவருக்கிருந்த ஈடுபாட்டை அருமையாக கூறியிருந்ததாக தெரிவித்தார்.

மேலும் 'அவருக்கு இருந்த அந்த ஈடுபாடுதான், அவரின் இந்த மாபெரும் வெற்றிக்கு காரணம். உச்சத்தில் இருக்கும் அவருடன் மீண்டும் நடிப்பேனா என்று தெரியாது, ஆனால் பல நாயகிகளும் அவருடன் நடிக்க ஆசைப்படுவதுபோல் எனக்கும் ஆசை இருக்கிறது'
 எனவும் கூறியிருந்தார். 
Disqus Comments
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();