Wednesday, 7 February 2018

'நாகினி' டிவி சீரியல் பாணியில் ஒரு தமிழ் திரைப்படம்!



நடிகர் ஜெய், நடிகைகள் ராய் லட்சுமி, கேத்ரின் தெரேசா, வரலட்சுமி சரத்குமார் ஆகியோரின் நடிப்பில், எத்தன் பட இயக்குனர் சுரேஷ் அவர்களின் இயக்கத்தில் உருவாகிக் கொண்டிருக்கும் படம் 'நீயா-2'.  இதில் நடிகர் ஜெய் IT இளைஞராக நடிக்கிறாராம். இது ஒரு ஹாரர் திரைப்படம் படம் என்ற சிறு தகவலை மட்டும் தற்சமயம் வெளியிட்டிருக்கிறது படக்குழு.

என்றாலும் 'நீயா-2' எனப் பெயரிடப்பட்டுளத்தை வைத்து நடிகர் கமல், ஸ்ரீ ப்ரியா நடித்து 1979ல் வெளிவந்த 'நீயா' படத்தின் இச்சாதாரி நாக கதையுடன் தொடர்புடையதாக இருக்கலாம் என கணிக்க முடிகிறது. நீயா படத்தில் தன் காதலனை இழந்த இச்சாதாரி நாகமொன்று, கொன்றவர்களை பழிவாங்குவது போன்று கதை அமைக்கப் பட்டிருந்தது.

மேலும்  இத்திரைப்படம் 1976ல் வெளியான 'நாகின்' (நாகினி) என்ற ஹிந்தி படத்தின் ரீமேக் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதே பாணியில் உருவான நாகினி என்ற ஹிந்தி தொடர் இந்தியா முழுவதும் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. தமிழில் இந்த தொடரின் முதல் பாகம் மட்டும் ஒளிபரப்பான நிலையில், சீரியல் ரசிகர்கள் அதன் இரண்டாம் பாகத்திற்கு மிகுந்த ஆவலோடு காத்துக்கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் அதே கதைக்களத்தில் வெள்ளித்திரையில் மிகப் பிரமாண்டமாக உருவாகி வரும் நீயா-2 திரைப்படமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெரும் என படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.



  
Disqus Comments
'