Sunday, 1 April 2018

3Dயில் உருவாகும் அமானுஷ்ய திரைப்படத்தில் நடிகர் G.V. பிரகாஷ்!


இசையமைப்பாளராக இருந்து பின் நடிகராக மாரியவர்களுல் நடிகர் G.V. பிரகாஷும் ஒருவர். தற்பொழுது நடிகராக ரொம்பவே பிசியாக மாறியிருக்கும்  இவரின் நடிப்பில், சமீபத்தில் நாச்சியார் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பையும் பெற்றது.

இடைவெளி இல்லாமல் அடுத்தடுத்து நடித்து வரும் இவர், ராஜீவ் மேனன் இயக்கத்தில் சர்வம் தாள மயம் எனும் இசை சம்பந்தப்பட்ட திரைப்படத்திலும் நடித்துவருகிறார்.

மேலும் இவரின் குப்பத்து ராஜா, அடங்காதே, 100% காதல் ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளியாகவுள்ள நிலையில், திரிஷா இல்லனா நயன்தாரா திரைப்பட இயக்குனர் ஆதிக் சந்திரனுடன் மீண்டும் இணையவிருக்கிறார் G.V. பிரகாஷ்.

இவர்களின் கூட்டணியில் முதன் முதலில் அடல்ட் காமெடி திரைப்படமாக வெளியான 'திரிஷா இல்லனா நயன்தாரா' மிகுந்த சர்ச்சைகளுக்கு உள்ளானாலும், வெற்றிப்படமாக அமைந்தது.

ஆனால் அந்த திரைப்படம் போல் அல்லாமல், முற்றிலும் வித்யாசமான அமானுஷ்ய கதையை மையமாகக் கொண்ட கதைகளத்தில் இவர்களின் இந்த புதிய திரைப்படம் உருவாக இருக்கிறது.

மேலும் அந்த அமானுஷ்யதிற்கு கூடுதல் சுவாரஸ்யம் சேர்க்கும் விதத்தில்  3D திரைப்படமாகவும் உருவாக இருக்கிறது.

Disqus Comments
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();